Thursday, August 13, 2009

Drama Classics - 2 : Manja Jibba & kaavi veshti

a quick one in Adhirshtakaaran, though only ordinary by Venkat's standards :

Hero Gopalakrishnan (SVe Sekar) is trying to fool his father-in-law-to-be, by acting like a millionare, with the help of his friend Siva, who works in a film production company.
He is going to meet the mamanaar-to-be for the first time and the identification as told by his "aaLu" would be "Manja Jibba and Kaavi Veshti" (yellow kurta and saffron dothi)

சிவா: கோடீஸ்வரன் மாதிரி நடிக்கணும் அவ்வளவு தானே?

கிருஷ்ணன்: ஆமாம்.

சிவா: ஏன் பார்ட்னெர்! எதுக்காக என்ன அம்மாவசை அன்னிக்கி ராத்திரி பத்து மணிக்கு மகாபலிபுரம் பீச்சுக்கு வர சொன்னின்க்?

கிருஷ்ணன்: அப்போ தான் சுண்டல் சீப்பா கிடைக்குமாம். உன்ன எவண்டா மகாபலிபுரம் பீச்சுக்கு வர சொன்னது? இப்போ தானே நாலரை மணிக்கு நேரு பார்க்குக்கு வரசொன்னேன்.

சிவா: இது டியாலாக்டா. நீ தானே சொன்னே உன்னோட மாமனார் வரும்போது பெரிய பணக்காரங்க மாதிரி ஆக்ட் பன்னானும்னு.

கிருஷ்ணன்: நீ இப்ப ஆக்ட் பண்ணியா? நீ எப்போ சாதாரணமா இருக்க எப்போ ஆக்ட் பண்ணறேன்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்கறது. டி.வீ. ல ஞாயத்துகிழமை மத்யானம் அவார்டு பிலிம் பாக்கறமாதிரி இருக்கு. எல்லாருக்கும் புரியற மாதிரி நடி

சிவா: இப்போ பாரு..... ஹுஹாஹாஹாஹா!

கிருஷ்ணன் : தெலுங்கு டப்பிங் லெவெலுக்கு போய்ட்டியே !!

No comments: