Friday, February 10, 2012

Qualified(?) Opinion

ஒரு கனவில் அரைகுறையாகக் கண்டது :

மாமி : "ஸ்ரீராமா! ஜோசியத்த பத்தி உன்னோட அபிப்ப்ராயாத சொல்லு"

நான் : "என்ன கேள்வி மாமி இது?"

மாமி : "என்னடா நார்மல் கேள்விதானே!"

நான் : "சரி. எனக்கு ஜோசியத்த பத்தி என்ன தெரியும் னு கொஞ்சம் சொல்லுங்கோளேன் "

மாமி : "எனக்கு பெருசா ஒண்ணும் தெரியாது. ஏதோ பத்திரிக்கைல படிச்சதுதான்."

நான் : "நான் அதக் கேக்கல. 'எனக்கு' ஜோசியத்த பத்தி என்ன தெரியும் னு உங்களுக்கு தெரியுமோ அத கொஞ்சம் சொல்லுங்கோ னு கேட்டேன்"

மாமி : "அது எப்படிடா எனக்கு தெரியும்? இப்படி அர்த்தாம் இல்லாத கேள்வியா கேக்கார!"

நான் : "ஒருத்தனுக்கு ஒரு விஷயத்த பத்தி தெரியுமா? தெரியாதா? தெரியும்னா எவ்வளவு தெரியும்? அபிப்பிராயம் சொல்லர அளவுக்கு தெரியுமா? னு எல்லாம் தெரிஞ்சுக்காம அபிப்பிராயம் கேக்கறது அர்த்தமான கேள்வியா?"